காலணி காரங்க உட்கார்ந்ததால் சேரை எரித்துவிட்டேன்!” – ஆடியோவால் பரபரப்பு! குடியாத்தம் டிஎஸ்பி அதிரடி!

செய்தி. ஏ.ஜோ மோசஸ்,

கே.வி.குப்பம், செப்.2: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இருக்கையை எரித்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூரைச் சேர்ந்த சந்திரபாபு (52), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி புவனேஸ்வரி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சந்திரபாபுவுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து சந்திரபாபுவிடம் பேசியதாகவும், பின்னர் அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியை சந்திரபாபு எரித்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், “காலனி காரங்க உட்கார்ந்ததால் சேரை எரித்துவிட்டேன்” என சந்திரபாபு கூறும் வகையில் ஆடியோ இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கருதி கே.வி.குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்திரபாபு மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவரை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் சிலையில் அடைத்தனர். 

இச்ச சம்பவத்தை பொருத்தவரையில் குடியாத்தம் டி.எஸ்.பி.திரு சுரேஷ் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்ததின் பேரில் ஒரு பெரிய மோதலங்கு தடுக்கப்பட்டிருக்கிறத.

இருந்த போதும் உளவுத்துறை அப்பக்கமாக தங்கள் துப்பறியும் பணியை சற்று கவனித்தால் சிறப்பு.