பணம் வைத்து தாயம் விளையாடியவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம்! 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
செய்தி: ஜி.குலசேகரன்,
நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பணம் வைத்து தாயம் விளையாடியதாக கூறப்படும் நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த மேல் பச்சூர் பகுதியில் உள்ள பாரத கோவில் அருகே சிலர் பணம் வைத்து தொடர்ந்து தாயம் விளையாடி வருவதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது, அங்கு பணம் வைத்து தாயம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மொபட் உள்ளிட்ட 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin
