“100 நாள் ஆட்சி… ஒரு யுகத்திற்கான மனசாட்சி!” – திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ!
ம.பா.கெஜராஜ்,
சென்னை: தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பட்டியலிட்டு முதல்வர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் விஜய் பட்டியலிட்டுள்ள முக்கிய திட்டங்கள்:
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.
717 மதுபானக் கடைகள் மூடல்.
12 லட்சம் மாணவர்கள் மற்றும் 1 லட்சம் இளைஞர்களுக்கு வெற்றித் திறன் பயிற்சி.
TN-VETTRI திட்டத்தின் கீழ் கிராமப்புற சுகாதாரம், குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.
போதைப்பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள்.
அண்ணனின் சீர் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை.
வெற்றி வீடு திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.
வெற்றி 150 திட்டத்தின் மூலம் 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்.
200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி.
வெற்றி மடிக்கணினித் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பிராண்டட் மிதிவண்டிகள்.
வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி மற்றும் நேரடி தொடர்பற்ற பத்திரப்பதிவு.
100 நாள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் முதல்வர் விஜய் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

admin
