விவசாய பாட்டிக்கு தன்னுடைய ஒன்றரை லட்ச ரூபாய் கூலிங் கிளாஸை  அணிவித்த முதல்வர் விஜய்

விவசாய பாட்டிக்கு தன்னுடைய ஒன்றரை லட்ச ரூபாய் கூலிங் கிளாஸை  அணிவித்த முதல்வர் விஜய்

!செய்தி:ம.பா.கெஜராஜ்,

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் விஜய் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டிய நிலையில், இன்று காலை 11.35 மணியளவில் அணையின் பிரதான 8 கண் மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

முதற்கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காவிரி நீரில் நெல்தானியங்கள் மற்றும் மலர்களைத் தூவி முதல்வர் விஜய் வரவேற்றார்.

மேட்டூர் அணை நீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட நெல் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அணை திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆட்டுக்கொட்டகையை பார்த்து வாகனத்தை நிறுத்திய முதல்வர்மேட்டூர் அணைக்கு முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக சென்றபோது, வழியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கொட்டகையை பார்த்தார்.

உடனடியாக வாகனத்தை நிறுத்திய முதல்வர், அங்கு இருந்த விவசாயக் குடும்பத்தினரை சந்தித்தார்.

அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த வயதான பாட்டியிடம் அன்புடன் பேசிய முதல்வர் விஜய், அவருடன் கைகோர்த்துக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார்.

மேலும், அந்த நேரத்தில் தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழற்றி அந்த பாட்டிக்கு அன்புடன் வழங்கினார்.

அதனின் விலை ஒன்னரை லட்சம் ரூபாய் ஆகும். முதல்வரின் இந்த எதிர்பாராத அன்பான செயலைக் கண்டு அந்த விவசாயக் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

டெல்டா விவசாயத்துக்காக மேட்டூர் அணையை திறக்கச் சென்ற முதல்வர், வழியில் ஆட்டுக்கொட்டகையை பார்த்து வாகனத்தை நிறுத்தி, விவசாயக் குடும்பத்தினரை சந்தித்து அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல்வர் விஜயை வரவேற்றனர்.

மேட்டூர் வரும் வழியிலும் சாலையோரங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அணையின் வலது கரைப் பகுதியில் காவல் துறை சார்பில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.