கிறிஸ்மஸ் பிரார்தனை!

கிறிஸ்மஸ் பிரார்தனை!

ஜி.குலசேகரன்,

கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குழந்தை இயேசு உருவ பொம்மை மற்றும் நிஜ குழந்தையையும் காட்டி கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள்.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள வின்னேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி  நடைபெற்றது.

     இதில் ரோமன் கத்தோலிக் மறைமாவட்ட பேராயர்  அம்ரோஸ்பச்சமுத்து தலைமையில் ஊர்வலமாக வந்த மக்கள் தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு குறித்த பாடல்களை பாடினர்.

  இரவு 12 மணிக்கு குழந்தை இயேசு குழந்தையாக பிறந்ததை அறிவித்து உருவ பொம்மையை எடுத்து காட்டியும் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த நிஜ குழந்தையையும் காட்டியும்  கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

  சிறப்பு திருப்பலிபூஜையும் நடைபெற்றது மேலும் பிரார்த்தனையில் உலகம் அமைதியுடனும் மக்கள் நலமுடனும் வாழ பிரார்த்தணைகளை செய்தனர் இதில் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது

    இதே போன்று வேலூர் அண்ணாசாலையில் உள்ள சிஎஸ்.ஐ மத்திய பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழாவானது கொண்டாடப்பட்டது. அதிகாலை மற்றும் காலை வேளை ஆராதனைகள் நடைபெற்றது.

   வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாக்கள் காட்பாடி குடியாத்தம் பேர்ணாம்பட்டு பள்ளிகொண்டா,பாகாயம்,சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் கோலாகலமாக வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.