நறுவீ நடத்திய சாதனை படைக்கும் விழா! கலெக்டர் பங்கேற்றார்!

நறுவீ நடத்திய சாதனை படைக்கும் விழா! கலெக்டர் பங்கேற்றார்!

கு.அசோக்,

 வேலூரில் ரத்த சோகை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தியா மற்றும் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 3500 மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து சாதனை படைக்கும் விழாவானது நடந்தது.

  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் அக்சிலியம் கல்லூரியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் 50 ஆம் ஆண்டை முன்னிட்டு நறுவீ மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  3500 மாணவிகளுக்கு மூன்று மணி நேரத்திற்குள்ளாக ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து இந்தியா மற்றும் ஆசியா புத்தகத்தில் சாதனையில் இடம் பெறும் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமை தாங்கினார் நறுவீ.

  மருத்துவமனையின் நிறுவனர் சம்பத் இம்முகாமினை துவங்கி வைத்தார் இதில்  கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி செயலாளர் மேரி ஜோஸ்வின் ஒருங்கிணைப்பாளர் அமுதா வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  இதில் மாணவிகளுக்கு ரத்த பரிசோதனையில் ரத்த சோகை விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முகாமானது நடைபெற்றது இதில் திரளான மாணவிகள் கலந்துகொண்டனர்.