சூறையாடப்படும் திருப்பத்தூர் ஏரிகள்! ஏற்பாடுகளை கவனிக்கும் விசேஷ பிரிவு!

சூறையாடப்படும் திருப்பத்தூர் ஏரிகள்! ஏற்பாடுகளை கவனிக்கும் விசேஷ பிரிவு!

ஜி.கே.சேகரன்,

 மல்லப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டுநர் தப்பி ஓட்டம்.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி சாலையில் மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார்  தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்தது.

  அதை வழிமறித்து மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார்  தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. அப்போது டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

  அதனை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதை நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 மேலும் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

 குறிப்பு:- திருப்பத்தூரை பொறுத்தவரை எஸ்.பிக்கு தகவல் அளிக்கக்கூடிய பிரிவில் முக்கிய அதிகாரிகள் இல்லாததால் மாவட்டம் முழுக்க மண் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் அதிக அளவில் நடக்கிறது.

  உதாரணத்துக்கு இம்மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகளுக்கு இல்லீகலாக மண் கடத்தப்படுகிறது.

  இதற்காக பல ஏரிகளில் இரவும் பகலும் இயந்திரங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் வீடு பிடித்து தங்கியிருக்கிறது ஒரு டீம். அவர்கள் அனைவருமே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாஃபியாக்கள் ஆவர். இவர்களிடம் பெரிய அளவிளான மண் அள்ளும் ஜெசிபிக்கள் மற்றும் லாரிகள் உள்ளன.

  மேற்படி புதுக்கோட்டை பார்ட்டிகள் விவசாயத்துக்கு மண் அள்ள குத்தகை எடுத்துக்கொண்டு, உள்ளூர் அரசியல் பிஸ்தாக்களுக்கு மேல் குத்தகை விட்டிருக்கிறார்கள்.

   இந்த கூட்டுக் கொள்ளையால் பல ஏரிகளும், நிலங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன.

வருவாய் துறை கண்காணித்தாலும் கூட காவல் துறையே இந்த கொள்ளைகளை தடுக்க வேண்டும். ஆனால் அந்த விசேஷ பிரிவில் தான் மாவட்ட அதிகாரிக்கு தகவல் அளிக்க மறைக்கப்படுகிறதே?