தவெக தலைவர் விஜயின் மனைவி விவகாரத்து கோரி மனு!

தவெக தலைவர் விஜயின் மனைவி விவகாரத்து கோரி மனு!

கே.முகில்,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

 கடந்த 24ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். பின்னர் அந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

 சங்கீதாவின் பின்னணி

சங்கீதா இலங்கைத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னர் குடும்பத்துடன் லண்டனில் வாழ்ந்து வந்தார். அவரது தந்தை தொழில்துறையில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தை பார்த்தபின் அவரின் நடிப்பில் ஈர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

   அதன் பின்னர் விஜயை நேரில் சந்திக்க சென்னை வந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சந்திப்பு, பின்னர் குடும்பங்களின் அறிமுகமாக வளர்ந்தது.

    அப்போது விஜயின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரை சங்கீதா சந்தித்தார். இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

   இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஜேசன் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றியுள்ளார். திவ்யா சாஷா, தெறி திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் காணப்பட்டார்.

   கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் உறவைப் பற்றி வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. குறிப்பாக வாரிசு திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கீதா பங்கேற்காதது பேசுபொருளானது.

 ஆனால் இரு தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. தற்போது சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.