சீட்டு ஒதுக்கீடு.... கையெழுத்து போட டெல்லி செல்கிறாரா இ.பி.எஸ்.!
ம.பா.கெஜராஜ்,
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தைப் பொறுத்தவரை பிரதான அங்கமாக வகிக்கிறது அதிமுக. இருந்தாலும் கூட பாஜகவின் ஆட்டுவிப்புக்கு அசைந்து கொடுக்கும் இடத்துக்கு அதிமுக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 2, 2026) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பாஜக தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4ல் மட்டும் வெற்றி பெற்றது. அவை கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் ஆகும்.
இம்முறை 40 தொகுதிகள் வரை வேண்டும் என்று கேட்கின்றனர். ஏனெனில் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது. கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனி அணியாக நின்று 18 சதவீதம் வரை வாக்குகளை பெற்றனர்.
அதில் பாஜகவிற்கு கிடைத்தது 11 சதவீதம். அதுமட்டுமின்றி 10 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இவை அனைத்தையும் கணக்கில் வைத்து கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்பதாக சொல்லப்படுகிறது.
அதைத்தவிர துணை முதல்வர் அது இது என பல ஒப்பந்தங்கள் இன்று நிகழலாம்.
எஜமான்கள் சொல்வதை மீறி இவர் என்ன செய்யப்போகிறார். கூப்பிட்டு கையெழுத்தை பெறப்போகிறார்கள் அவ்வளவுதானே?

admin
