ஆரம்பம் ஆவது கவர்னருக்குள்ளே...அடங்குவதும் கவர்னருக்குள்ளே..முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!
ஜி.கே.சேகரன்,
உதவி வேண்டுமானால் ஆளுநர் மாளிகை அணுகலாம் எனக் கூறிய ஆளுநருக்கு பதில் அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் ஆளுநர் மாளிகையை அணுகலாம் என ஆளுநர் கூறி இருந்தது குறித்து திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆரம்பம் ஆவது கவர்னருக்குள்ளே அது ஆடி அடங்கி போவதும் கவர்னருக்கு உள்ளே என்று அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக சொன்னார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்து கேட்டதற்கு, நூற்றுக்கணக்கான விளக்கங்களை எங்கள் கட்சித் தரப்பில் இருந்து கூறிவிட்டோம் என்றார்.
குதிரை பேரும் தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக ஆளுநரிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு, இதற்கான விளக்கத்தை எங்களுடைய அமைப்புச் செயலாளர் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் அவருடைய குரல் தான் என்னுடைய குரல் என துரைமுருகன் கூறினார்.

admin
