இஸ்லாமிய மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியரை வீட்டுக்கு வழி அனுப்பி வைத்த பெண் காக்கிகள்!

இஸ்லாமிய மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியரை வீட்டுக்கு வழி அனுப்பி வைத்த பெண் காக்கிகள்!

ம.பா.கெஜராஜ்,

 வெயில் மாவட்டத்தில் அறிஞர் பெயரில் உள்ள சாலையில் மொத்தம் மூன்று காவல் நிலையங்களும், பழைமை வாய்ந்த  மூன்று பெரிய கல்விக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கல்லூரியை மையப்படுத்தி அவ்வப்பொழுது பாலியல் சர்ச்சைகளும் ஊழல் சர்ச்சைகளும் எழுவதுண்டு. இந்நிலையில் அதைச் சார்ந்த மேனிலைப்பளியில் ஒது பாலியல் முயற்சி நடந்துள்ளது.

 இது காவல் நிலையத்தில் புகாராக தொடுக்கப்பட்டது. இருந்தாலும், பரிதாபம் காரணமாக வழக்கு பதியாமல் குற்றம் புரிந்த ஆசிரியரை வீட்டுக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 வெயிலூரில் சுண்ணாம்பு பெயரைக் கொண்ட ஒரு தெரு உள்ளது. அங்கு மரியாதையாக வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் உள்ளனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ப்ளஸ் டூ பிரைவேட்டாக எழுத முயன்றார். இஸ்லாமிய நாடு ஒன்றின் பெண் அதிபராக இருந்தவரின் பெயரைக்கொண்ட அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி தலாக் பெற்றவர்.

  அப்படியிருக்க அவர் ப்ளஸ் டூ பரிட்ச்சை எழுதினார். அவருக்காக அண்ணாசாலையில் உள்ள மேற்படி மேனிலைப்பள்ளியில் சென்டர் ஒதுக்கியிருந்தனர். கடந்த 01.07.2026 ஆம் தேதியன்று காலை அவர் தேர்வு எழுதினார். அந்த வகுப்பறையில் சூப்பரவைசராக சதீஷ்குமார் என்கிற ஆசிரியர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அவர் ஊசூருக்கு போகும் வழியில் உள்ள ஒரு அரசு பள்ளியின் வாத்தியாராம்.

 இந்நிலையில் இஜாப் அணிந்துக் கொண்டு தேர்வு எழுதிய மேற்படி மாணவிக்கு மிக நெருக்கத்தில் வந்த சதிஷ்குமார் மதிப்பெண்களுக்கான பதிலை சொல்லி கொடுப்பதாக சொல்லி, இந்தப்பெண்களுக்கு உதவி செய்தால் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்வதில்லை. நன்றி கெட்டவர்கள், உன் ஹால் டிக்கெட்டை கொடு என்று மாணவியிடம் கேட்டு அதில் அவரது செல் எண்ணை குறித்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

 மேலும் என்னை நீ எப்போது வேண்டுமானாலும்  கூப்பிடு வருகிறேன் என்று சொன்னதுடன். ஹிஜாபை கழற்று என்று முகத்தை காட்ட சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். பின்னர் உன் காதை காட்டு என்று மிக மிக நெருக்கத்தில் மாணவியிடம் சென்றுள்ளார்.

  மேலும் பல இடங்களில் ராங் டச் செய்திருக்கிறார். இதனால் பயந்து போன மாணவி, நீங்க ரொம்ப ஓவரா போறீங்க, நீங்க என்னிடம் இப்படி தப்பா நடந்துக் கொள்ள முயற்சிப்பது பற்றி எங்க வீட்டுக்கு சொன்னால் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

 இருந்த போதும் ஆசிரியர் சதீஷ்குமார் ஜொல்லுவிடுவதை நிறுத்தவில்லையாம்.

 எனவே இது தொடர்பாக தம் சகோதரர்களிடம் மாணவி சொல்லி அழுதுள்ளார். பின்னர் அறிஞர் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ் அம்மா ஆசிரியரை தொடர்பு கொண்டு ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வர சொல்லியிருக்கிறார்.

 இதனால் பயந்து போன ஆசிரியர், தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களை உடன் இணைத்துக் கொண்டு தப்பிவிட்டார். தேர்வின் போது பிட் அடித்தார், அதை ஆசிரியர் சதீஷ்குமார் தட்டிகேட்டதால் பொய் புகார் கொடுத்துள்ளார் என்று டகுல் விட்டுள்ளனர்.

  கூடவே கவனிப்பும் செய்வதாக கூறப்பட்டதால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கபடாமல் ஆசிரியரை தப்பவிட்டனராம் பெண் காக்கிகள். இதை கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அந்த ஆசிரியரை விரட்டி  கொத்தாக பிடித்து வந்து ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

 இதனால் செய்வதறியாத காக்கிகள் விசாரணையை தொடங்கினர். மேலும் இதை சமாதானம் செய்து வைப்பதற்காக அச்சமூகத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் சிலரையும் வரவழைத்து நினைத்தபடியே புகாரை வாபஸ் செய்ய வைத்தனர்.

   அதற்காக பாலியல் குற்றம் புரிந்தவராக சொல்லப்பட்ட ஆசிரியர் சதீஷ்குமாரின் மனைவி, இரண்டு பிள்ளைகள், அவரது அண்ணன் உட்பட பலரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து மாணவியிடம் கையெடுத்து கும்பிட்டு அவரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல வைத்திருக்கின்றனர்.

   பின்னர் என்ன? புகார் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனது. இது ஒருபுறம் இருக்க, இதே போல் எக்ஸாம் ஹாலில் வேறு ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கும் ஆசிரியர் சதீஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஸ்டேஷனுக்கு வந்து அப்போதே முறையிட்டனர். அவர்களிடம் விவரங்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

   இதை அறிந்த இஸ்லாம் அமைப்புகள் சில சம்மந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு வந்து சட்டபடி நடவடிக்கை கோரினர். இந்த ஆசிரியர் பல மாணாவிகளுக்கு இப்படி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாணவி துணிந்து புகார் அளித்திருக்கிற போது வழக்கு பதியுங்கள் என்று கோரினர்.

   ஆனாலும் காக்கிகள் தாங்கள் எடுத்த வாபஸ் முடிவை மாற்றிக் கொள்ளாமல், பாலியல்  மன்னன் சதீஷை பத்திரமாக வழயனுப்பிவைத்தனர்.

 இது குறித்து மாணவியின் சகோதரர் கூறுகையில் என் சகோதரியின் ஹால் டிக்கெட்டில் அந்த ஆசிரியர் அவரது செல் நெம்பரை எழுதி கொடுத்தது உண்மைதான். ஆனால் நாங்கள் புகாரை வாபஸ் பெற்றுவிட்டோம், அவரது பசங்க எல்லாம் பார்க்க பாவமாக இருந்தது என்றார்.

  இது தொடர்பாக சம்மந்தப்பட நிலைய பெண் காக்கி அதிகாரியிடம் பேசினோம். அவுங்க சமாதானம் ஆகிவிட்டனர். முகத்தை அடையாளம் காண்பதற்காக இரண்டு தடவை ஹிஜாபை கழற்ற சொன்னதால் அந்த மாணவிக்கு கோபம் வந்துவிட்டது. புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்.

 சப்டிவிஷன் அதிகாரியிடம் இது குறித்து பேசின போது, டென்ஷனான அவர், புகார் கொடுத்த மாணவி புகாரை எழுதி கொடுத்தது தொடர்பாக வீடியோ கூட பண்ணியிருக்காரு. கட்ட பஞ்சாயத்து எல்லாம் செய்யவில்லை. அப்படியென்றால் என்னிடம் வந்து புகார் கொடுக்கச் சொல்லுங்கள் என்று ஆத்திரப்பட்டார்.

 சரிங்க ஆபிசர் குற்றம் சாட்டப்பட்ட நபரான ஆசிரியர் சதீஷின் மனைவி மக்களை கையெடுத்து கும்பிடவைத்த காக்கிகளின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்குமே அதை சப்டிவிஷன் அதிகாரி எடுத்து நடவடிக்கை எடுப்பாரா என்று கேட்கும் உள்ளூர்வாசிகள், இது தொடர்பாக கலெக்டரிடம் மண்டே பெட்டிஷன் கொடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க கோரவுள்ளனர்.     

குறிப்பு:-இவ்வளவு பிரச்சனை நடந்தது அல்லவா? இருந்தாலும் சிங்கப்பெண் படைப்பிரிவினருக்கு இதைப்பற்றி தெரியவே இல்லையாம் ஹி...ஹி.... ஹி!!!