அடுத்தவர் மனைவியை பலாத்காரம் செய்த பாதிரியார்கள்! பாவமன்னிப்பு கேட்ட போது- அடங்...ஙோ....?!
க.உன்னி கிருஷ்ணன்,
கிறிஸ்தவம் என்றாலே அன்பு, பாசம், விட்டுக் கொடுத்தல், அரவணைப்பு, உதவுதல், பாவ மன்னிப்பு போன்றவை நினைவுக்கு வரும். ஆனால் தற்போது அந்த சூழல் படிப்படியாக மாறிவருகிறது. கட்டபஞ்சாயத்துக்காரர்கள் பிடியில் பேராயமும், டுபாக்கூர் ரவுடிகளின் ராஜ்யத்தில் போஸ்ட்டிங்குகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழலில் ஆலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம் பெண்ணை மிரட்டி 5 பாதிரியார்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி கிளாரா பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஜேம்ஸ் துபாயில் பணிபுரிந்து வந்தார். அப்படியிருக்க கடந்த 4 மாதங்களுக்கு முன் கிளாராவின் கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செலவழிக்கப்பட்டது,
இது தொடர்பான எஸ்.எம்.எஸ் தகவல் ஜேம்ஸின் செல்போனுக்கு சென்றது.
அதிர்ச்சியடைந்த அவர் மனைவிக்கு போன் செய்து விவரத்தை கேட்டார். அப்போது அவர், ஒரு பாதிரியார் தன்னை மிரட்டி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்ட லுக்குவரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். பின்னர் ஓட்டலுக்கான பணத்தை தன்னிடமே செலுத்துவதற்கு வற்புறுத்தினார். இதனால் பணத்தை செலவழித்ததாக திடுக்கிடும் தகவலை கணவனிடம் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ் உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் மனைவியிடம் விசாரித்தபோது, மேலும். 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ள தகவலை தெரிவித்தார். இதை கேட்டு ஜேம்ஸ் கடும் அதிர்ச்சியடைந்தார்.
மெர்சி தனக்கு நேர்ந்ததைப் பற்றி அழுதுக்க் கொண்டே கணவரிடம் கூறினார். திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கிளாராவின் தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கிளாராவுக்கு ஜேம்ஸிடன் திருமணம் நடந்தது.

மறு வருடம் கிளாராவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் பழைய நினைவுகள் அவரை வாட்டியது.
எனவே கிளாரா மலங்கரை ஆர்த்தோ டக்ஸ் சபை சுட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கி ருந்த பாதிரியாரிடம், முன்பு நடந்தசம்பவத்தை கூறிபாவ மன்னிப்பு வேண்டினார். இதை கேட்ட பாதிரியார் தனது ஆசைக்கு இணக்காவிட்டால் கணவரிடம் கூறுவேன் என்று கிளாராவை மிரட்டி பலாத்காரம் செய்து அந்தகாட்சிகளை அதே சபையை சேர்ந்த மேலும் பாதிரியார்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர்களும் கிளாராவை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவரத்தை கேட்ட கணவர் ஜேம்ஸ் கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து - அந்த 5.பாதிரியாரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்,
இதற்கிடையே ஜேம்ஸ் - மனைவியை விவாகரத்து செய்ய தீர்மானித்தார்.
அப்படியிருக்க மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை - சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளம் பெண்ணை 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குற்றம் நடந்தது நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடப்பாவிகளா? இப்பவெல்லாம் ஆலயத்தின் பெயரால் கட்ட பஞ்சாயத்து துவங்கி பாலியல் குற்றம் வரை நடத்திவருது ஆண்டவருக்கே பொறுக்காது.

admin
