டாஸ்மாக் போல ஆவின் பால் பாக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம்! வேலூர் பால் திருத்தணிக்கு கடத்தல்! தில்லாலங்கடியால் குழப்பம்!

திருத்தணி முருகன்,      

 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்-ன், மூலம் ஆவின்பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்-ன் பால்பாக்கெட்டுகள் அண்டை மாவட்டத்து எல்லையான திருத்தணியில் விற்கப்பட்டு வருகிறதாம்.

முகவர்கள் இதற்கான பணிகளை ஜம்மென்று ஆற்றி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

 இது பற்றின விவரம் வருமாறு,

 சமீப நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால் சரியாக சப்ளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுவருகிறது.

 எனவே திருத்தணி பழைய பஸ் நிலையம் மற்றும் திருத்தணி பழைய சென்னை சாலையில் உள்ள வியாபாரி¢கள், தினம் சுமார் 500 லிட்டர் பாலை வேலூர் மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்படும் நபர்களிடம் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.

 அதிகாலை இரண்டு மணிக்கு ஈச்சர் வாகனம் மூலம் வேலூரிலிருந்து பால் கொண்டு வரப்படுவதாக முகவர் ஒருவரே சொல்கிறார்.

 அப்படி வேலூரில் இருந்து கடத்தி வரப்படும் ஆவின் பால் எம்ஆர்பி ரேட்டை விட ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இது அரை லிட்டர் பாக்கெட்டின் நிலவரம்.

 அதே ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுக்கு எம்ஆர்பி யை விட கூடுதலாக 2 ரூபாய் கூடுதலாக விற்பதும் தெரியவந்துள்ளது.

 அது மட்டுமின்றி இந்த பால் தரமான பால் தானா என்று ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

  மேலும்,  வேலூர் ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகள் திருடு போவதாக எழுந்து வரும் சர்ச்சைக்கு இடையே இப்படி நடைபெறுவது நம்பகத்தனைமையை இழக்கும் வகையில் உள்ளது.

  வேலூர் ஆவின் பால் முத்திரையுடன் அதிகாலை திருத்தணியில் வந்திறக்கப்படும் பால் போலி பால் பாக்கெட்டா அல்லது களவாடப்படும் பால் பாக்கெட்டுகள் இப்படி மாற்றிவிடப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

 மொத்தத்தில் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்-ன் பெயரில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பால் பாக்கெட்டுகள் சப்ளை செய்யப்படுவதில் பல்வேறு தில்லாலங்கடிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 அப்படியிருக்க திருத்தணியில் வேலூர் மாவட்ட ஆவின் பால் விற்பனை அதிக விலைக்கு விற்பனை திருத்தணி மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதை ஏன் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் பல மாதமாக உறங்கி வருகிறார்கள் என்று வீடியோக்களை பகிர்ந்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இரண்டு மாவட்ட ஜி.எம்., மேலாளர்கள், மார்க்கெட்டிங் அதிகாரிகள் இதற்கு முழு பொறுப்பேற்றக வேண்டும்.

 இது குறித்து வேலூர் ஆவின் நிர்வாகித்தின் பொது மேலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் தெரிவிக்கையில்,  அரக்கோணம் ரூட் 1 மற்றும் அரக்கோணம் ரூட் 2 ஆகியவற்றுக்குத் தான் நாங்கள் பால் அனுப்புகிறோம். திருத்தணிக்கு நாங்கள் பால் அனுப்புவதில்லை. இருந்தாலும் என்னவென்று விசாரிக்கிறேன் என்றார்.