எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்" - மு.க.ஸ்டாலின்! ஆருடம்!
ம.டெல்லிராஜன்,
எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்" "திமுக தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரை.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டியது.
பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது.
திமுக ஆட்சியின் மேல் இருந்த நம்பிக்கையில்தான் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன.
ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள்.
நாம் ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் இவர்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.
திமுக தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். ஒரு மாசத்துல வரலாம், மூன்று மாதத்தில் வரலாம் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார்.

admin
