வேலூர் ஆட்சியரை வழிமறித்து கோஷமிட்ட மக்கள்! வடக்கு காவல் நிலையத்தார் அலட்சியத்தால் பரபரப்பு!
ம.பாகெஜராஜ்,
வேலூர் மாவட்ட கலெக்டர் பயணித்த காரை வழிமறித்து நியாயம் கோரிய இஸ்லாமிய மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெட்டு குத்து வன்முறை நடந்தது.
இதில் ஒருவர் வெட்டுப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வெட்டு குத்து சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை மட்டும் கைது செய்த போலீசார் முக்கியமான இரண்டு குற்றவாளிகளை முன் ஜாமின் எடுத்துக் கொள் என்று அட்ஜஸ்ட் செய்து விட்டு விட்டார்களாம்.
இது குறித்து கடந்த இரண்டு நாட்களாக வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி ஜெயலட்சுமி அவர்களை பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜமாத் காரர்கள் அணுகி நியாயம் கேட்டனர்.

வழக்கம்போல இதோ அதோ என்று சாக்கு சொல்லியே போலீசார் அவர்களை கழற்றி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று (25.06.2026) அன்று இரவு வடக்கு காவல் நிலைய வாசல் அருகிலேயே ஆட்சியர் பயணித்த காரை மறித்து கோஷமிட்டனர்.
இதனால் பதறிப் போன இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி உள்ளிட்ட டீம் அங்கு வந்து மக்களை சமாதானப் கொடுத்த படாத பாடுபட்டனர்.
பின்னர் அவர்களை ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாருங்கள் அங்கு சமாதானமாக பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்று சொன்னார் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.
உடனடியாக ஏஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் பலர் வந்து அவர்களை ஸ்டேஷனுக்குள் வாருங்கள் என்று மழுப்ப முயன்றனர்.
இருந்த போதும் ஆத்திரத்தில் இருந்த மக்களை சமாதானப்படுத்த நேரம் பிடித்தது.
வெட்டு குத்து சம்பவத்தில் குறிப்பிட்ட மேற்படி இரண்டு நபர்கள் ஏற்கனவே பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் இதே பாணியில் கைது செய்யப்படாமல் முன் ஜாமினில் வெளி வந்தனராம்.
பாதிக்கப்பட்ட நபர்கள்ஆட்சியர் காரை மறித்து நியாயம் கேட்கும் அளவிற்கு வடக்கு காவல் நிலையத்தார் செயல்பட்டது பெரும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

admin
