ஒரு நாள் உள்ளூர் டூரை துவக்கிவைத்த ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சுற்றுலாவை துவங்கி வைத்தார்.
வேலூர்மாவட்டம், வேலூரில் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா தின தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் பாதுகாப்புத்துறை மூலம் அமுல்படுத்தப்பட்டும் பள்ளிகள் விடுதிகள் ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி மாணவர்களை இச்சுற்றுலாவுக்கு அழைத்து சென்றனர்.
இந்த சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு மாவட்ட அறிவியல் மையம், மாநில மற்றும் மத்திய அரசு அருங்காட்சியகங்கள், ஜலகண்டேஸ்வரர் ஆலயம், அரியூர் தங்கக்கோயில் ஸ்ரீபுரம் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.
இதில் மூன்றுவேளை உணவுகளும் அடிப்படை வசதிகளும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டு சுற்றுலா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏரி சீரமைப்பு,
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வேலூர் வட்டம், பலவன்சாத்து ஏரியை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்டவருவாய் அலுவலர் திருமதி த.மாலதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர்திருமதி கவிதா, வேலூர் வட்டாட்சியர் திரு. செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வசந்தம் நகர் பார்வை
அதே போல் மழைகால பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக வசந்தம் நகர் காணாற்றை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் எஸ்.பி.நெ.மணிவண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.