முதலமைச்சர் திறந்து வைத்த "விழுதுகள்" ஆட்சியர் பங்கேற்பு!

முதலமைச்சர் திறந்து வைத்த "விழுதுகள்" ஆட்சியர் பங்கேற்பு!

ஜி.குலசேகரன், 

 திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.19.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மையத்தின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

  இம்மையத்தில் ஆக்குபேஷன் தெரபி, உளவியல் ஆலோசனை, பிசியோதெரபி, பார்வை குறைபாடுகள் கண்டறிதல், சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு உதவி உபகரணங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக குழந்தைகள், முழுமையான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை எளிதில் பெற முடியும் என்பதால், இது அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வேலூர் மாவட்டம்,

 அதே போல் வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ,7  .56 கோடி மதிப்பீட்டில் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் வகுப்பறை கட்டிடங்களை திறந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்

  வேலூர்மாவட்டம்,வேலூர் தொரப்பாடியில் உள்ள  தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7.56 கோடி மதிப்பில் 4 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், பணிமனை மற்றும் கழிவறை தொகுப்புகட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்ததை அடுத்து  மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி,குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

  தொடர்ந்து வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.11.50 கோடிமதிப்பில் மாணவியர் விடுதி, ரூ.3.36 கோடி மதிப்பில் மாணவர் விடுதி, தந்தை பெரியார்அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.1. 44 கோடி மதிப்பில் 2 பல்நோக்குஅரங்குகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தார்.இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.