பிடிஓ வை முற்றுகையிட்டு கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்ட கிராமத்தினர்! 1.23.கோடிக்கு மாட்டுசந்தை ஏலம்!

  பிடிஓ வை முற்றுகையிட்டு கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்ட கிராமத்தினர்! 1.23.கோடிக்கு மாட்டுசந்தை ஏலம்!

ஜி.குல்கசேகரன்,

 வேலூர் அருகே பொய்கை மாட்டு சந்தை ஏலம் ரூ.1.  43 கோடிக்கு சென்றது ஏலம் விட கூடாது என கிராம மக்கள் கிராம ஊராட்சியினர் எதிர்ப்பு தர்ணா. மூன்றாண்டுகளாக ஊராட்சிக்கு வழங்க வேண்டிய 30 சதவிகித நிதி சுமார் ரூ.72 லட்சம் வழங்காததால் ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

 வேலூர்மாவட்டம்,வேலூர் அருகேயுள்ளது தமிழ்நாட்டின் பெரிய மாட்டு சந்தையான பொய்கை மாட்டு சந்தை. இந்த சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஆண்டுதோறும் அனைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏலம் விடுவது வழக்கம்.

 நேற்று அனைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார் தலைமையில் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் இதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வந்திருந்தனர்.  

 அப்படியிருக்க, பொய்கை ஊராட்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வருவாயில் 30 சதவிகிதம் அந்த ஊராட்சிக்கு வழங்க வேண்டும் என்ற  விதின் படி சுமார் ரூ.72 லட்சம் வழங்கபடவில்லை, மூன்றாண்டுகளாக பணம் கேட்டும் இதுவரையில் வழங்காத காரணத்தினால் இன்று பொய்கை சந்தை ஏலத்தை நடத்த கூடாது என (பாமக) ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் பிரச்சனை செய்தனர்.

 மேலும் அக்னிவேல் முருகன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் ஏலம் நடக்கும் ஹாலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏலம் துவங்கவில்லை.

  மேலும் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை நிதி தேவை என கோரிகை வைத்தனர்.

  இதனால் முதற்கட்டமாக ரூ.15 லட்சம் நிதி இன்றே வழங்குவதாக அறிவித்து உறுதியளித்த பின்னர் பிற்பகலில் ஏலம் நடந்தது.

  இதில் ரூ.1.  43 கோடிக்கு பொய்கை மாட்டு சந்தை ஏலம் போனது முற்றுகை வாக்குவாதம் தர்ணாவால் அனைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.