எஸ்.சி..எஸ்.டி..மக்களுக்கான ஒதுக்கீடு நிதியை வேறு துறைக்கு மாற்றுவதா? வேலூர் திருப்பத்தூர் பாஜகவினர் ஆர்பாட்டம்!

எஸ்.சி..எஸ்.டி..மக்களுக்கான ஒதுக்கீடு நிதியை வேறு துறைக்கு மாற்றுவதா? வேலூர் திருப்பத்தூர் பாஜகவினர் ஆர்பாட்டம்!

கு.அசோக்,

வாணியம்பாடியில் மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு வழங்கும் நிதிகளை தமிழக அரசு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறி தமிழக அரசை கண்டித்து பாஜக பட்டியலின அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாஜக பட்டியலின அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் விஜயசாரதி தலைமையில் போராட்டம் நடந்தது.

   பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்ட நிதியை மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியதாக கூறியும், இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்துவதாகவும் குற்றசாட்டு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த ஆர்பாட்டத்தில் பாஜக ,மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன்,மாவட்டதுணைத்தலைவர் ஞானதாஸ் மற்றும் அதிமுக,அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 வேலூர் மாவட்டம்,

 அதே போல் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்  பாஜக பட்டியலின அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர்  மதன் தலைமையில் இதற்கான ஆர்பாட்டம் நடைபெற்றது.

  பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்ட நிதியை மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியதாக கூறியும், இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்துவதாகவும் குற்றசாட்டு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்தில்

பாஜக ,மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ ,பட்டியல் அணி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி மற்றும்  , பாமக  மாவட்ட செயலாளர் ரவி,நிர்வாகிகள் சுரேஷ்,வெங்கடேசன்.,உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.