வேலூர் வருகிறார் விஜய்! பந்தல் கால் பூஜை நடந்தது!

வேலூர் வருகிறார் விஜய்! பந்தல் கால் பூஜை நடந்தது!

கு.அசோக்,  

 த.வெ.க.தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக பந்தல் கால் நடப்பட்டது.

   வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில்  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம்  பகுதியில்  தவெக விஜய் மக்கள் சந்திப்புக்கூடம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 அதற்காண இடம்  தேர்வு செய்யப்பட்டு 33 ஏக்கர்  நிலத்தில் சமன் செய்யும் பணிகள் நடைபெற்ற வருகிறது.

 இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு  பூஜைகள் செய்து பந்தல் கால் நடப்பட்டது.

தவெக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வேலூர் அணைக்கட்டு கே வி குப்பம் ஆகிய தொகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.