ஆற்காடு பைனான்சியர் வீட்டில்இன்கம் டேக்ஸ் ரைட்!
கு.அசோக்,
தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் திடீர் தேர்தல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையால் ஆற்காட்டில் பரபரப்பு - பைனான்ஸ் பங்குதாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியில் சுப்புலட்சுமி பைனான்ஸ் நிறுவன பங்குதாரரான இளங்கோ(67) என்பவரது வீட்டில் வருமான வரி கணக்கு பரிவர்த்தனைகளில் குளறுபடிகள் இருப்பதாக கூறி தேர்தல் வருமானவரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் மாடவீதியை சேர்ந்தவர் இளங்கோ(67). அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
இவரது வருமான வரி கணக்கு தாக்கலில் முறைகேடான பண பரிவர்த்தனைகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இன்று மதியம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் தேவி ஆகியோரின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 3 கார்களில் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். .
இதில் வருமான வரி குளறுபடிகள் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாப்பாக்கத்தில் உள்ள பைனான்ஸ் பங்குதாரர் ஒருவரின் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

admin
