நறுவீ திருமண தம்பதிகளை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மகன் நிதின் சம்பத் - அபிராமி
திருமணம் கடந்த 5 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே திட்டமிட்டபடி முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருந்தார். ஆகவே அவர் நறுவீ இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது.
இந்நிலையில் திருமண தம்பதிகளான நிதின் சம்பத் - அபிராமி ஆகியோரை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து அவர்களை வாழ்த்தி திருமண பரிசு வழங்கினார். உடன் ஜி.வி. சம்பத் - அனிதா சம்பத், அடையாறு ஆனந்த பவன் குழுமநிர்வாக இயக்குனர் கே.டி.வெங்கடேசன். இயக்குனர் விஷ்ணு சங்கர் ஆகியோர் இருந்தனர்.