நோகாம நுங்கு திண்ண முடியுமா?

நோகாம நுங்கு திண்ண முடியுமா?

ஜி.கே.சேகரன்,

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால நுங்கு, இளநீர், வெள்ளரிப்பழம், தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்,கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை வெப்பம் காரணமாக  மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வீட்டை விட்டு வெளியில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடபட்டுள்ளது.

  இதன் காரணமாக மதிய நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் வெயிலின் தாக்கம் குறைக்க பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், நுங்கு இளநீர் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தி வருகின்றனர்.

 இதேபோல் கோடை காலத்தில் வரும் நுங்குகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 நுங்கு 600 ரூபாயாம். நுங்கு மரங்களை ஏற ஆள் பற்றா குறையாலும், விளைச்சல் இல்லாத காரணத்தினால் நுங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று விற்பனையாளர்சொல்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் பழங்களின் விலையும் தற்போது கூடுதலாக விற்கப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

பர்கர் பிசாவை ஆர்டர் போட்டுவிட்டு நோயை விலை கொடுத்து வாங்குறீங்க, உடலை கூலாக வைப்பதுடன் நீர் சத்தை கொடுக்கும் நுங்கு நோகாமல் கிடைக்குமா?