பூத் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை வாரி சுருட்டிய நிர்வாகிகள்! கண்டிக்கப்படுவார்களா?

 பூத் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை வாரி சுருட்டிய நிர்வாகிகள்! கண்டிக்கப்படுவார்களா?

 உ.சசிகுமார்,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், பூத் செலவுக்காக கொடுத்த பணத்தை நிர்வாகிகள் ஆட்டையை போட்டுவிட்டார்கள் என்று பாஜக வில் சர்ச்சை வெடித்திருக்கிறது.

 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பூத் செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை நிர்வாகிகள் அமுக்கிக்கொண்டனர் என்று போஸ்ட்டர் ஒட்டி சிலர் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். 

 அதில் நடவடிக்கை எடு... பாஜக விருது நகர் பாராளுமன்றம் தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி, பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட ந்தியில் சுமார் 40 லட்சம்வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடு என்று நான் நிர்வாகிகளின் பெயரையும் புகைப்படங்களையும் இணைத்து போஸ்ட்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

 இது ஒரு பக்கம் இருக்க, தற்போது அக்கட்சியை சேர்ந்த சிலர் வாட்ஸ் அப் குரூப்களில்ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆடியோ பதிவுகளில் கட்சிக்காக பல ஆண்டு உழைத்து உள்ளோம். ஆனால் மண்டல தலைவர்கள் மேலிடம் கொடுத்த பணத்தை மொத்தமாக அபகரித்துக் கொண்டனர். கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற ரீதியில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

  அந்த ஆடியோவில் ஒரு பூத்துக்கு மேலிடம் ரூ.8000 வழங்கியது, அதில் ரூ.5000 மட்டுமே மண்டல் தலைவர்கள் செலவு செய்தார்கள். மீதி ரூ.3 ஆயிரம் அவர்கள் எடுத்து விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்த பட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது அப்படி இருக்க ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு மண்டல தலைவர்களும் கையாடல் செய்துள்ளார்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என்ற ரீதியில் அவர்கள் தங்களது ஆடியோ மெசேஜ்களை வாட்ஸ்அப் குரூப்புகளில் போட்டு வருகின்றனர்.

  அதே போல், எங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை. பிரியாணி சரியில்லை என மண்டல் தலைவரிடம் போய் சொன்னால் அவர் சிரித்துக் கொண்டே அப்படியா சந்தோஷம் எனக் கூறுகிறார். பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்தார்களா என கேட்டால் அது பற்றி பேச மறுக்கிறா£ என்று அவர்தரப்பு குறையை கொட்டிதீர்த்திருக்கிறார்.

  தமிழகத்தில் இம்முறை பாஜகவின் தேர்தல் பணியை கண்டு திராவிட மாடல்களே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். இந்த தருணத்தில் அக்கட்சியின் தமிழக பாஜக செம்மையாக செயலாற்றினார்கள், இந்த சூழலை கீழ்மட்ட நிர்வாகிகள் மனசாட்சியோடு பயன்படுத்தவில்லை.

 இதைத்தான் மேற்கண்ட தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. இப்படிப்பட்ட நிர்வாகிகளை தலைமை கண்டித்து வைத்தால் நலம்.