திருப்பூரில் தீவிரவாதிகள் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்! வேலூரிலும் ஊடுருவலா?
ம.பா.கெஜராஜ்,
திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் தங்கியிருந்த நிலையில் அவர்களை டெல்லி போலீசார் கொத்தாக தூக்கியிருக்கிறார்கள்.
பகீர் கிளப்பும் இந்த கைது சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பை பற்றி திமுகவுக்கு அரசுக்கு கவலை இல்லை என்று விளாசியிருக்கிறார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்திருப்பதாவது,
கொலைக் கொள்ளை என்பதெல்லாம் தாண்டி தீவிரவாத தாக்குதல் உச்சத்திற்கு தமிழக த்தை சீர்துலைத்து வைத்திருக்கிறது. திமுக அரசு தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் ஏஜென்சி நடவடிகை மேற்கொண்டு வரும் நிலையில் இங்குள்ள மாநில அரசு என்ன செய்தது.
பயங்கரவாத எதிர்ப்பு படை ஏடிஎஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத திமுக ஆட்சியை தொடரவிட்டால் 1998 போல் மீண்டும் ஒரு கோரச் சம்பவம் கூட வழி வகுத்து விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
ஆக தமிழகத்தில் அமைதி திரும்ப திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இதே போல் பலகாலமாக வங்க தேசத்தைச் சேர்ந்த பலர் இல்லீகலாக வேலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் டேரா போட்டிருக்கிறார்கள்.
இது குறித்த அதிர்வ்வியளிக்கும் தனிக்கட்டுரை பின்னர் விரிவாக வெளியிடப்படும்.

admin
