திமுக திணறுகிறதா?
த.நெல்சன்,
தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திட திமுக ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. இதற்காண உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டணியில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது கருணாநிதி கடைபிடிக்கும் முஸ்லீம்கள் ஃபர்ஸ்ட் என்கிற ஃபார்முலாவாகும்.
அப்படியிருக்க டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவிடம் பேசிவிட்டு, வெளியே வந்து ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், 5 தொகுதிகள் கேட்டிருப்பதாகவும், அதில் குறைந்தது 4 தர வேண்டும் என எதிர்பார்க்கிறாராம்.
ஆனால் புதிய கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வரப் போகிறோம் என்றும், அதனால் தொகுதிகளை குறைத்து கொள்ளுங்கள் என்றும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் தானம் செய்ய தயாராகி விட்டோம் என்றார்..
திமுகவின் கணக்கு என்பது குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும். குறிப்பாக உதய சூரியன் சின்னமாக இருக்க வேண்டும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 188 இடங்களில் உதய சூரியன் போட்டியிட்டது. அப்படி பார்த்தால் 18 இடங்களை கூட்டணி கட்சிகளுக்குள் வேறு மாதிரி சரிகட்ட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு 6 + 2 என கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதலாக இரண்டு தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு 35 முதல் 40 தொகுதிகள். இதில் நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் தொடர்ச்சியாக சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். இவர்கள் முன்வைத்த இரண்டு விஷயங்கள் என்பது ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட்.
காங்கிரஸ் தலைமை தங்கள் கட்சியினருக்கு கறாராக சில அறிவுறுத்தல்களை வழங்கினாலும் புகைச்சல் அடங்கிய பாடில்லை.
இந்தச் சூழலில் சென்னை வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என விளக்கம் அளித்தார், இருப்பினும் ராகுல் காந்திக்கு தெரிந்தே இந்த சர்ச்சையை கிளப்புகிறார்களா என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு இருந்தது.
இதை தொடர்ந்து வேணுகோபால் பலமுறை மன்றம் ஸ்டாலின் சந்திப்பு தள்ளி போய்க்கொண்டிருந்தது,
அப்படி இருக்க திடீர் திருப்பமாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்த கே.சி. வேணுகோபால் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இதில் கனிமொழி எம்பி மற்றும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். சந்திப்பின் போது ராகுலிடம் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி உள்ளார் இந்த சந்திப்பில் முதல் இல்லத்தில் தயார் செய்யப்பட்ட உணவை அருந்தியப்படியே தொகுதி பங்கீடு பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

admin
