ரைடு வருவதை முன் கூட்டியே தகவல் சொன்னது யார்!

ரைடு வருவதை முன் கூட்டியே தகவல் சொன்னது யார்!

கு.அசோக்,

 அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் ஆய்வு-கணக்கில் வராத பணம் ரூ.1,82,800 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ரைடு நடக்கவிருப்பதை முன் கூட்டியே சில ப்ளாக் ஷிப் தகவல் கொடுத்துவிட்டனராம்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் சுமார் 8 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையை நடத்தினர்.  அப்போது அலுவலகத்தில் பதிவுப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்ததால், பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களிடையே பரபரப்பு நிலவியது.

 சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், பதிவேடுகள், கணினி பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.     மேலும், அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் யாரேனும் பணத்தை மறைத்து அல்லது வீசி சென்றுள்ளனரா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

 இந்த சோதனை எந்த புகாரின் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சோதனை தொடர்ந்து நடைபெற்றது இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,82,800 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இன்னமும் பணம் இருந்ததாம், ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரைடு வருவதாக முன் கூட்டியே தெரிந்துவிட்டதால் கிட்டதட்ட 5 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்கேப் செய்துவிட்டனராம்,