வழக்கறிஞர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

வழக்கறிஞர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

ம.பா.கெஜராஜ், 

வழக்கறிஞர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

   தென்கிழக்கு டெல்லி ஓக்லா தொழில்துறை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் நரிந்தர். இவர் நீதிமன்ற வளாகத்தில் புகார்தாரர் ஒருவரின் வழக்கறிஞரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதை சமரசம் செய்து வைக்க முயன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரையும் அவர் மிரட்டியிருக்கிறார்.

 எனவே மேற்படி 2 வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அருண் மோங்கா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சப்- இன்ஸ் பெக்டரின் நடவடிக் கையை நீதிபதி கடுமையாக கண்டித்தார்.

 எஸ்.ஐ.நரிந்தரின் இத்தகைய தவறான நடத்தையை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியை நிலை நாட்ட நீதிமன்றத்திற்கு உதவும் கவுரவமான கடமையைச் செய்யும் இந்த நீதிமன்ற அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் அளவுக்கு அவர் தனது காக்கி உடை அதிகாரத்தை மிகவும் திமிர்பிடித்த நிலைக்கு மாற்ற முடியாது.

 அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைப்பதால் அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அச்சுறுத்தினார். பொறுப்புள்ள காவல் துறை அதிகாரி சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டும், வேட்டையா டுபவராக அல்ல,' எனக் கூறினார்.

 இதையடுத்து, நரிந்த ருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் விரும்புவதாக நீதிபதி கூறியபோது, தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ப தாக நீதிபதியிடம் எஸ். ஐ. நரிந்தர் வேண்டினார்.

 அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

 நரிந்தருக்கு நீதிமன்றம் வைத்த கொட்டைப் பார்த்தாவது அவரைப் போன்ற அதிகாரிகள் ஒழுங்காக இருக்கவேண்டும்.