நலவாரிய தலைவர் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க மறுப்பு! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்!

 நலவாரிய தலைவர் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க மறுப்பு! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு தினசரி கூலி ரூ.,300 மட்டும் வழங்கபடுகிறது தூய்மை பணியாளர்கள் சரமாரி குற்றச்சாட்டு - தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி திகைப்பு -துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் சரியாக சேரவில்லை மாநகராட்சி ஆணையர் லஷ்மணன் ஒப்புதல் - அதிகாரிகளே இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

 வேலூர்மாவட்டம், வேலூர் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி ஆணையர் லஷ்மணன் தலைமையில் நடைபெற்றது.

  இதில் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 ஆனால் இக்கூட்டத்தில் உயரதிகாரிகள் யாருமே கலந்துகொள்ளவில்லை,   இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பேசுகையில் சம்பளம் சரியாக வழங்கபடுவதில்லை ஆரசு நிர்ணயித்த கூலியை கொடுப்பதில்லை 300 மட்டுமே ஒரு நாள் கூலியாக வழங்குவதாகவும் இ.எஸ்.ஐ பி.எப் போன்றவைகள் வழங்குவதில்லை என சரமாரியாக குற்றம்சாட்டினார்கள்.

  இதில் மாநகராட்சி ஆணையர் லஷ்மணன் தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்று சேராமல் உள்ளது தேக்கமடைந்துள்ளதாக பேசினார்.

  மேலும் பெரும்பாலான தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கவில்லை, இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசுகையில் அரசு நிர்ணயித்த கூலி ரூ.413 அடுத்த மாதம் முதல் கட்டாயம் வழங்கபடும் நலவாரிய அடையாள அட்டையை கட்டாயம் பெறுங்கள், அப்போது தான் சலுகைகள் கிடைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துங்கள் என பேசினார்.

 தூய்மை பணியாளர்கள் ஆவேசமாக பேசியதால் நலவாரியதலைவரே திகைத்து போனார்.