குப்பை தொட்டியில் ஒட்டப்பட்ட டபுள் எஞ்சின் விமர்சன போஸ்டர்!

குப்பை தொட்டியில் ஒட்டப்பட்ட டபுள் எஞ்சின் விமர்சன போஸ்டர்!

கு.அசோக்,

டபுள் என்ஜின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது"* அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம்"* என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு காணப்பட்டது,.

  வேலூர் மாவட்டம், காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையம் அருகாமையில் தேசிய ஜனநாயக  கூட்டணியை விமர்சிக்கும் வகையில் போஸ்ட்டர்கள் குப்பை தொட்டி முற்கொண்டு மூத்திர சந்து வரைஒட்டப்பட்டிருந்தன.

  பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படங்களும், தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்திய ரயில் இன்ஜினில் தொங்கிச் செல்வது போன்ற படமும் அதில் இடம் பெற்றிருந்தன.

   இந்த போஸ்டரை யார் ஒட்டியது என்பது குறித்து எந்த விவரமும் இல்லாததால் வேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

   ஒரு வேளை அவர்களாக ஒட்டிக் கொண்டனரா?