103 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்!
Naresh.N,
நக்சல்களை 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முற்றிலும் ஒழிப்போம் என்று சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில் பல பகுதிகளில் நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக பல்வேறு நக்சலைட்டு அமைப்அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 23 பெண்கள் உட்பட 103 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
அரசின் மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், சரணடைந்த இவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் பகுதி மத்தியபிரதேசம், மராட்டியம் தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டிய சில பகுதிகளை உள்ளடக்கியது என்பது சுட்டிக்காட்டப்பட கூடியது ஆகும்.

admin
