ஒரு தடவை பட்டன் அழுத்தினால் இரண்டு ஓட்டு விழுகிறது! அதுவும் பாஜக சிம்பல் என்றதால் பரபரப்பு!

ஒரு தடவை பட்டன் அழுத்தினால் இரண்டு ஓட்டு விழுகிறது! அதுவும் பாஜக சிம்பல் என்றதால் பரபரப்பு!

Naresh.N,

கேரளாவில், மாதிரி வாக்குப் பதிவின்போது, பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவான விவகாரத்தை ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அந்த வகையில், இன்று ஏப்ரல் 18 நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கேரள மாநிலம், காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்ட செய்தி, நாளேடுகளில் வெளியாகியிருப்பதையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம் தெரிவித்தனர்.

இதே பல் தமிழகத்திலும் வாக்கு இயந்திரத்தை சோதனை செய்த போது பாஜக சின்னம் உள்ள பட்டனை ஒரு தடவை அழுத்தினால் இரண்டு ஓட்டு பதிவாகி இருக்கிறது.

இதுபோன்று கோவை உள்ளிட்ட பகுதியில் நடந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால் இதை கணக்கில் கொள்ள மாட்டோம் என்று தேர்தல் அதிகாரிகள் சொல்லி தற்காலிகமாக சமாதானப்படுத்தியுள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக்கூடிய விஷயமாகும்.