வேலூருக்கு 2 ஆம் இடம்! ஏழு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற போட்டிகள்!

வேலூருக்கு 2 ஆம் இடம்! ஏழு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற போட்டிகள்!

ஜி.கே.சேகரன்,

வேலூரில் 7 மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 300 வீரர்கள் பங்கேற்றனர் இதில் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா.¢

 வேலூர்மாவட்டம், வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் தீயணைப்புதுறையினர் வடக்கு மண்டல விளையாட்டு போட்டிகள்   துவங்கி நேற்றுடன் 2 நாட்கள் நடைபெற்றது.  இதில் 300 வீரர்கள் கலந்துகொண்டனர் தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் விஜயகுமார் போட்டிகளை துவங்கி வைத்தார்.

  வேலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் .செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.

  குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,கயிறு ஏறுதல் ஏணி போட்டு வேகமாக மீட்பு பணியை செய்வது தீயை விரைவாக அணைப்பது மீட்பு நடவடிக்கைகள் ,தடை தாண்டுதல்,கைப்பந்து போட்டி ,நீச்சல்,ஓட்டம் உள்ளிட்ட பல   போட்டிகள் நடத்தப்பட்டது.

   இதன் பரிசளிப்பு விழாவானது துணை இயக்குநர் தீயணைப்பு விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கலந்துகொண்டு கோப்பைகள் சான்றுகள் ரொக்கபரிசுகளையும் வழங்கினார். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை காஞ்சிபுரம் ராணிப்பேட்டை தீயணைப்பு அணி வென்றது இரண்டாவது இடம் வேலூர் அணியும் மூன்றாம் இடம் திருவண்ணாமலை அணியும் வென்றது.