பைக்கில் சென்றவரை நிறுத்தி பேசிய சச்சின்!

பைக்கில் சென்றவரை நிறுத்தி பேசிய சச்சின்!

 உ.சசிகுமார்,

 பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் பெயரை தனது ஜெர்சியில் பதிந்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்ற ரசிகருக்கு சச்சின் அதிர்ச்சிக்காட்சி தந்தார்.

    சச்சின் தமது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காருக்கு முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அணிந்து கொண்டு ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று இந்தியில் கேட்டார்.

 அதற்கு பதிலளிக்க திரும்பிய அந்த பைக் நபர், காரில் அமர்ந்திருந்த சச்சினை பார்த்த உடன் சார் என்று சொல்லி அதிர்ந்தார்.

  உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி சார். என் வாழ்நாளில்  கடவுளை  நான் நேரில் பார்த்துவிட்டேன். 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லி மகிழ்ந்தார்.

   அந்த நபர் சச்சினின் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டினார். அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு  ஆட்டோகிராப் கொடுத்தார்.

  நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். நீங்க ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சச்சின் சொன்னார்.

  என்று கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என்று கூறினார்.

  பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

 சச்சின் மற்றும் அவரது ரசிகரின் உடையாடல் கொண்ட காட்சிகள் எக்ஸ் பதிவில் பதிவிடப்பட்டிருக்கிறது.