சிறுவயது திருமணமும் கர்பமும் தான் சவாலாக உள்ளது! தலைமை ஆசிரியர்கள் தடுக்க வேண்டுமென கலெக்டர் பேச்சு!
ஜி.குலசேகரன்,
இளம் குழந்தைகள் அனைவருக்கும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - நமது மாவட்டத்தில் சவாலாக உள்ளது சிறுவயது திருமணமும் கர்பமும் தான் அதனை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் மூன்று நாட்கள் பயிற்சியை துவங்கி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூரில் தனியார் ஓட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து 3 நாட்கள் பயிற்சி பட்டறையை இன்று துவங்கி வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இதில் திரளான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர் மேலும் இக்கூடத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் வழக்கறிஞர் சுமதி கபிலன் மாவட்ட சமூக நல அலுவலர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் தலைமையில் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் நாம் குழந்தைகளிடம் பாலியன சமத்துவம் சம மரியாதை பற்றி சொல்லிகொடுக்க வேண்டும் மேலும் அவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் சவலான ஒன்றாக திகழ்வது குழந்தைகள் திருமணமும் சிறு வயது பிரசவமும் கர்பமும் தான் அதனை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும்.
கல்வியின் மூலம் அவர்கள் சுயமாக முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையில் வெல்லும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென பேசினார்.

admin
