இந்து திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த இஸ்லாமியர்!
T.Md Irffan,
மத நல்லிணக்கத்திற்க்கு அடையாளமாக பேர்ணாம்பட்டில் ஏழை வீட்டு இந்து திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த இஸ்லாமியர்.
இன்று (25-05-2022) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் பக்கலப்பல்லி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் பிரபாகரன், மஞ்சு ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தில் தொண்டு நிறுவனம் நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுத்தார்.
அவரது பெயர், அல்ஃபாத தப்ரேஸ் ஆகும்,
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அல்ஃபாத தப்ரேஸ் என்பவர் அல்ஃபாத தொண்டு நிறுவனம் துவக்கி இந்த நிறுவனத்தின் மூலமாக மக்களுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து கொண்டிக்கிறார்.
இந்நிலையில் இவர் மாற்று சமூகமான இந்து சமூகத்தின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
மதசார்பின்றி நலத்திட்ட உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி என செய்த அனைத்து சமூகத்தினரும் மதிக்கத்தக்கவர்கள் வாழ்ந்த பேர்ணாம்பட்டு பகுதியில், இந்து சமூகத்தைச் சேர்ந்த இல்லத் திருமண விழாவில் ஒரு முஸ்லிம் தாலி எடுத்துக் கொடுத்து சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளதாக அவரை பலரும் பாராட்டுகிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அல்ஃபாத தொண்டு நிறுவனத்தை சேர்ந்த க.சந்தோஷ் குமார், தௌயூப், இப்ராஹிம், முனிவர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த திருமணத்துக்கு வருகைதந்த அல்ஃபாத தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களை சமூக சமத்துவ படை கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் பொன் குணசீலன். உள்ளிட்டோர் வானவேடிக்கையோடு வரவேற்றனர். இந்த திருமணத்தில் முல்லைஆஜி
பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர்,எஸ்.ரஜினி மாவட்ட இளைஞரணி தலைவர்,எம்.யாகதாஸ்
மாவட்ட கட்டுமான தொழில் செயலாளர்,யாகாதேவ் ஒன்றிய இளைஞரணி செயலாளர்,கே.பழனி ஒன்றிய பொருளாளர்,டி.பி.வெங்கடேசன்
ஒன்றிய தலைவர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

admin
