ஆசிரியர்கள் நன்கு தெரிந்துகொண்டு பிழையில்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்!
கு.அசோக்,
பள்ளி ஆசிரியர்களுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பெட்டகங்கள் வழங்கும் விழா மற்றும் செய்முறை கருத்தரங்கம் நடைபெற்றது
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்டெம் பயிற்சியானது முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் மற்றும் சிலுப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்பியல் மற்றும் கணிதம் செயல்முறையில் விளக்கும் கிட்டுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படும் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகை செய்யும் என்பதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியானது அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா பேசுகையில் இந்த செயல்முறை கிட்டுகள் மூலம் மாணவர்கள் எளிதல் இயற்பியல் சமன்பாடுகள் மற்றும் கணித பார்முலாக்களை புரிந்துகொள்வார்கள்.
இதன் மூலம் அவர்களின் கல்வி மேம்படும் இவைகளின் பயன்பாடுகளை ஆசிரியர்கள் நீங்கள் நன்கு தெரிந்துகொண்டு அதனை பிழையில்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
கல்வி மேம்பாடு அடைய வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த கிட்டுகள் வழங்கி பயிற்சி அளிக்கபடுகிறதுஎன பேசினார்.

admin
