கேரளா மாவோயிஸ்ட் தமிழ்நாடு கோர்ட்டில் ஆஜர்!
கு.அசோக்,
2016ல் மாயமான ஆற்காட்டை சேர்ந்த இளைஞர் மாவோயிஸ்ட் குற்றவாளி என கேரள போலீசார் கைது செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததால் பரபரப்பு காணப்பட்டது.
ஆற்காடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், கேரளா மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்திருந்தார்.
கேரளாவில் முதலமைச்சர் முன்பு சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் இராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு க்யூப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ஜெகநாத சாமி கோயில் தெருவை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் ரமேஷ்/34 என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போனதாக ஆற்காடு காவல் நிலையத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநில காவல் துறை சார்பில் மாவோயிஸ்ட் குற்றவாளி ஒருவர் இராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த நிலையில் அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய 10கும் மேற்பட்ட கேரள மாநில காவல்துறையினர் வாலாஜா அரசு மருத்துவமனையில் குற்றவாளியுடன் சூழ்ந்திருந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், ரமேஷ் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆற்காடு பகுதியில் காணாமல் போனவர்.
இவர் கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
மேலும் கேரள மாநிலத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது ரமேஷ் அம் மாநில முதலமைச்சர் முன்பு பத்துக்கும் மேற்பட்டவர் சரண் அடைந்ததாகவும் இவர் தற்போது அங்கு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிய அவ்ந்தது.
இந்நிலையில் இவருடைய வழக்கு தொடர்பாக இன்று கேரளா காவல்துறை மூலம் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ராணிப்பேட்டை தீவிரவாத மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, அச்சுறுத்தல் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் (க்யூ பிரிவு) 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள இராணிப்பேட்டை நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி எம். செல்வம் உத்தரவு வழங்கியுள்ளது என்றனர்.
இந்த சம்பவம் ராணிப்பேட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர் குறித்து வழக்கு பதிவு செய்தும் கூட அந்த வழக்கை முடிக்க இயலவில்லை. ஆனால் கேரளா போலீசார் அழைத்து வந்ததும் பரபரப்பாக விசாரிக்கிறார்களாம்.

admin
