என் சாவுக்கு கலெக்டர் வரக்கூடாது! அரை நிர்வாணமாக போராடிய விவசாயி மனு!

என் சாவுக்கு கலெக்டர் வரக்கூடாது! அரை நிர்வாணமாக போராடிய விவசாயி மனு!

ஜி.குலசேகரன்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரை நிர்வாணமாக நின்று தன் மனுவை அதிகாரிகள் வெளியே வந்து வாங்க வேண்டும் என போராட்டம் நடத்திய விவசாயியால் பரபரப்பு காணப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மானவள்ளி சின்னபிள்ளைவட்டம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் வாசு மேலும் மணிக்கு வாசு உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த வாசு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலர்கள் சார்பதிவாளர்கள் என அதிகாரிகள் வெளியே வந்து என்னிடம் மனுவை பெற வேண்டும் என கூறி அரை நிர்வாணமாக நின்றிருந்தார்.

  அவா வைத்திருந்த¢ மனவில் குறிப்பிட்டிருந்ததாவது, தன்னுடைய அப்பா மணிக்கு சொந்தமாக நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தில் 15 கோடி மதிப்பிலான ஏழு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

 அந்த ஏழு ஏக்கர் நிலத்தில் மணி விவசாயம் செய்து வந்ததாகவும்,  மணியின் பிள்ளைகளான கௌதம்,கதிர்வேல் ஆகிய இருவரும் மணி மற்றும் அவருடைய மனைவி இருவரிடம் கையெழுத்து வாங்கி ஏழு ஏக்கர் நிலத்தை இவர்கள் இருவரும் பத்திரப்பதிவு செய்துள்ளது. 

 அப்பா மணி இறந்த பிறகு உடன்பிறந்த ஐந்து பேர் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் வாங்கி 7 ஏக்கர் நிலத்தில் பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டனர்.

 நாங்கள் உயிருடன் இருக்கும்போதே உடன் பிறந்த ஐந்து பேரும் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் வாங்கிய தன்னுடைய சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் என் அப்பாவின் சொத்தை எங்களுக்கு வாங்கித் தரவேண்டும் எனவும் பிளார்ட் போட்டு இடத்தை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த கோரியும் பலமுறை மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவு துறை அலுவலர், சார் பதிவாளர் அலுவலர்களுக்கு முறையிட்டேன்.

 ஆனால்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்சம் பெற்றுகொண்டு மனைகளை விற்க அனுமதித்து உள்ளனர் எனவும் தனக்கு விவசாயம் தவிர வேறு தொழில் இல்லை எனவும் எனவே நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறேன்.

  இதற்கு காரணம் மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை அலுவலர் சார்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளே காரணமாவார்கள் எனவும் நாங்கள் குடும்பத்துடன் இறந்த பிறகு எங்கள் கண், இருதயம் மற்ற உறுப்புகளை ஏழை எளிய மக்களுக்கு டிஜிபி முன்னிலையில் கொடுக்க வேண்டும் எனவும்,எங்கள் குடும்பத்தின் சடலத்தை தங்கள் டிஜிபி முன்னிலையில் அடக்கம் செய்யுமாறும் தங்களின் அடக்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரக்கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

   இதுவே கடைசி கடிதம் எனவும் அனைத்து அரசியல்வாதிகளும், பத்திரிக்கை நிருபர்களும் எங்கள் குடும்ப சவக்கிடங்கிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட பட்டிருந்தது.

  மேலும் உடன் பிறந்தவர்களே இறந்து விட்டதாக கூறி போலி சான்றிதழ் வாங்கி சொத்தை அபகரித்த சகோதரர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் வெளியே வந்து மனுவை பெற வேண்டும்.

 இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.