விஸ்வரூபம் எடுத்த கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி! துணை ராணுவப் படைகள் குவிப்பு!
நரேஷ்.என்,
கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃ) கூடுதல் படைப்பிரிவுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஜெபி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய அரசு பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்பும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடாளுமன்ற கூட்டத்தொடருக்குள் சிஜெபி யை தம் கையடக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றூ திட்டமிட்ட மத்திய ஆளும்கட்சியின் திட்டத்துக்கு பெப்பே தான் கிடைத்திருக்கிறது.

admin
