சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

செய்தி: ம.பா.கெஜராஜ்,
சென்னை: சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (செப்.3) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.

அதன்படி, சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் நவீன தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்றுவரும் வகையிலான வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். மேலும், பசுமைக் கட்டிடத் தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகமாக இது உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நவீன வசதிகளும் புதிய தலைமைச் செயலகத்தில் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.