வேலூரில் காவலர் தினம்: உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் தூவி அஞ்சலி!
ஜி.குலசேகரன்,
வேலூர், செப். 6:
வேலூரில் காவலர் தினத்தை முன்னிட்டு, மக்களுக்காக பணியாற்றி உயிர்நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர் மாவட்ட காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், காவலர்கள் நினைவுத்தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம், சமூக விரோத செயல்களை ஒடுக்குவோம் என காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றனர். உயிர்நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது

admin
