த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது இளம் பெண் புகார்! பலமாக மறுப்பு!
கு.அசோக்,
தமிழக வெற்றி கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மோகன், கட்சிப்பதவி வழங்குவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக பெண் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் மீண்டும் புகார்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோடு, மாசாபேட்டை, அண்ணா நகர், பகுதியை சேர்ந்தவர் பவ்யலட்சுமி(34). இவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கழக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் தனக்கு கட்சியில் பதவி வழங்குவதாக தன்னை தனக்கு இறையாக்கி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், மேலும் தன்னை ஆசைக்கிணங்க வற்புறுத்தி மீண்டும் மீண்டும் தொல்லைக் கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தலைமை காவல் நிலையம் மற்றும் தமிழக முதல்வரின் தனி பிரிவு அலுவலகம், போன்ற அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் அளித்துள்ள நிலையில் அப்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஆற்காடு நகர காவல் நிலையத்திலும் அந்த பெண் நேற்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் மோகனிடம் விவரம் அறிய அவரிடம் பேசினோம்.
அப்போது அவர் தெரிவித்ததாவது. நாங்கள் பொது வாழ்க்கையில் உள்ளோம்., எங்களிடம் பலர் பேசுவார்கள். அப்படித்தான் அந்த பெண்ணும் பேசினார். என்னுடைய செல்போன் கால் விவரங்களை ஆராய்ந்தால் அவர்தான் பேசியிருப்பார். நான் ஒரு தடவை கூட அவரை செல் போனில் அழைத்து பேசியதே கிடையாது.
அந்த பெண்ணின் இந்த தவறான செய்கைக்கு பின்னணியில் எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தவறான இரண்டு நபர்கள் உள்ளனர்.
அவர்கள் பெயரை விசாரணையின்போது நான் சொல்வேன். அது மட்டுமின்றி அந்த பெண்ணை அவர்கள் தான் கூப்பிட்டுக்கொண்டு வருவதும், அழைத்துச்செல்வதுமாக உள்ளனர். அதற்காண ஆதாரங்கள் உள்ளது.
தவறு செய்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கு அமைதியாக இருந்து, நிரபராதி என்பதை ஃபுரூப் செய்திருந்தால் அவர்களை மீண்டும் கட்சியில் உறுப்பினராக சேர்க்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் எனக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இப்படியெல்லாம் பொய் புகார்களை பரப்பிவருவது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்று சொன்னார்.
மேலும் அந்த பெண் தொடர்புடைய மூன்று புகார்கள் குறித்தும் விசாரணையில் சொல்வேன் என்கிறார்.
புகார்களின் மீது துரித விசாரணை நடத்துவதில் ஆற்காடு ஸ்டேஷனுக்கு பெரிய அவார்டே கொடுக்கலாம் போங்க....?!

admin
