வேலூர் மாவட்டத்தில் ஒரு கொலை!
கு.அசோக்,
போதையில் ஏற்பட்ட தகராறு கூலி தொழிலாளி அடித்து கொலை - மேல்பட்டி போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கருணீகசமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் (42) அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரோஷன் குமார் (40 )மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு புதிதாக போடப்பட்டுள்ள வீட்டு மனைகளில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
¢ அப்போது லோகேஷ் என்பவருக்கு போன் வந்ததால் அவர் கிளம்பி விட்ட நிலையில் செல்வம் மற்றும் ரோஷன்குமார் ஆகியோர் மது அருந்தி உள்ளனர்.
அப்போது செல்வம் மற்றும் ரோஷன் குமார் ஆகியோருக்கு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரோஷன்குமார் அருகே இருந்த கட்டையால் செல்வத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் செல்வம் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ள நிலையில் லோகேஷ் திரும்பி வந்து பார்த்துள்ளா£.
¢செல்வம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனா.
¢ இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பகுதி மக்கள் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கடந்த செல்வத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஷன் குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஏற்கனவே செல்வம் மற்றும் ரோஷன் குமார் ஆகியோருக்கு முன் விரோதம் இருந்ததாகவும் ரோஷன்குமார் மீது செல்வம் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்ததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்ந்து மேல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலியிடங்களில் இது போன்ற மது பார் நடப்பதால் இவ்வித பிரச்சனை ஏற்படுகிறது போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றாலே எவரும் இதுமாதிரி பப்ளிக் பிளேஸில் குடிக்க மாட்டார்கள்.

admin
