ஏலகிரி மலையில் தீ! ஃபயர் சர்வீஸ் மெத்தனம்!

ஏலகிரி மலையில் தீ! ஃபயர் சர்வீஸ் மெத்தனம்!

ஜி.குலசேகரன்,

 ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் தீ பற்றி எரிந்தது.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் தற்போது மலைப்பகுதியில் காடுகள் உள்ளது. அங்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதியில் தீ பரவியது.

  இதனால் சுற்றுலா சென்று வீடு திரும்பியோர் அப்பகுதியில் தீயை பார்த்து அச்சமடைந்தனர்.

  மலைப்பகுதியில் எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் எவ்விதையை நடவடிக்கை எடுக்கவில்லை.

 திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள புளிய மரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

   அதே போல் திருப்பத்தூர் அடுத்த ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைந்துள்ள புளியமரத்தில் திடீரென நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

  இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக பொதுமக்கள் தீயணைப்புத் துறைவிற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து சுமார் அரை மணி நேரமாக தீயை அணைத்தனர்.

  இந்நிலையில், உடனடியாக வனத்துறையினர் அந்த மரத்தை அறுத்து எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் மரத்தின் அருகே டிரான்ஸ்பர் இருந்ததால் தீயை பரவாமல் தடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.