Follow up!   கம்ப்ளைன்ட் கொடுத்தவரே சஸ்பெண்டான பரிதாபம்!ஆறு வன ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Follow up!   கம்ப்ளைன்ட் கொடுத்தவரே சஸ்பெண்டான பரிதாபம்!ஆறு வன ஊழியர்கள் சஸ்பெண்ட்!

ஜி.குலசேகரன்,

https://livelook.in/Turning-off-CCTV-cameras-and-stealing-government-money

திருப்பத்தூரில் சந்தன மர கிடங்கில் 1.75 டன் எடைகள் கொண்ட 55 செம்மர கட்டைகள் மாயம்!ஆறு வன       

  ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் புகார் அளித்தவருமே சிக்கினார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, செம்மர கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மர கட்டைகள் இந்த விற்பனை கிடங்கில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.

   அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்மர கடத்தல் வழக்கில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,750 கிலோ எடை கொண்ட 55 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு சந்தன மர விற்பனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் கடந்த ஜூலை 18- ஆம் தேதி திடீரென மானது.

 வனத்துறை அலுவலர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் கணக் கெடுப்பின்போது சம்பந்தப்பட்ட 55 செம்மர கட்டைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

   இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு அலுவலர் ஜோதிலிங்கம் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

   அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

   இந்த நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த  திருப்பத்தூர் சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப் பூட்டு அலுவலர் ஜோதிலிங்கம், மற்றும் வனவர் பரமகுரு, வனக்காப்பாளர்களான ராமமூர்த்தி, ரேணு,சந்தோஷ், மோகன் குமார், ஆகிய ஆறு பேரை வேலூர் தலைமை வன பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த செம்மரக்கட்டைகள் திருட்டு சம்பவத்தில் தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.