“கையில் பட்டாக்கத்தி... காட்சியளித்த பிள்ளையார்!” வசூர் விநாயகர் திருவிழாவில் வித்தியாசமான பேனர்!

“கையில் பட்டாக்கத்தி... காட்சியளித்த பிள்ளையார்!” வசூர் விநாயகர் திருவிழாவில் வித்தியாசமான பேனர்!

செய்தி: ஜி.குலசேகரன்,

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள வசூர் பகுதியில் பிள்ளையார் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி அப்பகுதியில் பிள்ளையார் சிலை மற்றும் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பிள்ளையார் கையில் பட்டாக்கத்தியை ஏந்தியிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

பொதுவாக விநாயகர் பல்வேறு விதமான அலங்காரங்களில் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், வசூர் பகுதியில் நடைபெற்ற விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனரில் பிள்ளையார் பட்டாக்கத்தி ஏந்தியபடி காட்சியளித்தது வித்தியாசமானதாக அமைந்திருந்தது.

இதனை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

விழாவையொட்டி அப்பகுதியில் பக்தர்கள் திரண்டு வந்து பிள்ளையாரை வழிபட்டனர். சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றன.

வசூர் பகுதியில் நடைபெற்ற பிள்ளையார் திருவிழாவில் வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பேனர், தீர்த்தகிரி மலை முருகன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.