சென்னை: மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுஞ்செய்தி – உடற்கல்வி ஆசிரியர் கைது
!செய்தி: ம.பா. கெஜராஜ்,
சென்னையில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி படித்து வரும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மூர்த்தி (34), மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை கண்டித்து எச்சரித்துள்ளனர்.
எனினும் அதன்பிறகும் மாணவிக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், ஆசிரியர் மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பு. மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளியில் இருக்கும் ஒரு சில உடற்பயிற்சி ஆசிரியர்கள் இதையே வேலையாக வைத்திருக்கிறார்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக இருக்கிறது.

admin
