Google Chrome-ல் தமிழக முதல்வர் பெயர் குறித்து தவறான தகவல்?
செய்தி: ம. பா. கெஜராஜ்,
Google Chrome தேடலில் தமிழக முதலமைச்சர் குறித்த தகவல் சரியாக பிரதிபலிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஸ்கிரீன்ஷாட்டில், 2026 செப்டம்பர் 8-ஆம் தேதியிட்ட தகவலில் தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் குறித்த செய்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தகவல் காணப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவி வகித்து வருகிறார். 2026 மே 10-ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்றதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமும் பதிவு செய்துள்ளது.
எனவே Google Chrome உள்ளிட்ட தேடல் தளங்களில் தமிழக முதலமைச்சர் குறித்த தகவல்கள் பழைய தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்து பிரதிபலித்தால், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் Google நிறுவனத்திடம் முறைப்படி தகவல் தெரிவித்து, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் சரியாக பதிவு செய்யப்பட்டு, தேடல் முடிவுகளிலும் பிரதிபலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

admin
