திமிரியில் பள்ளி வேன் ஓட்டுநர் அடித்துக் கொலை! மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

திமிரியில் பள்ளி வேன் ஓட்டுநர் அடித்துக் கொலை! மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பியபோது 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

செய்தி:கு அசோக்,, 
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பிய தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் (36). இவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவர்களை ராணிப்பேட்டை மாவட்டம், கருங்காலிக்குப்பம் கிராமத்தில் இறக்கிவிட்டு வேனில் திரும்பிச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், வேனை மறித்து இம்ரானை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இம்ரான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

லும், இம்ரான் தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இம்ரானை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக இறக்கிவிட்டு திரும்பிய வேன் ஓட்டுநர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.